ரஜினி கட்சியில் இணையும் கராத்தே தியாகராஜன்… ப.சிதம்பரம் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

 

கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்திவிட்டதாகக் கருதும் ப.சிதம்பரம் சமீப காலமாக பாஜக தலைகளுடன் இணக்கம் பாராட்டுவதாகவும் ஒரு செய்தி கசிகிறது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் கராத்தே தியாகராஜன் அவர் பின்னால் போய்விடுவார் என்று காங்கிரஸுக்குள் இருக்கும் அவரது  எதிரிகள் அழுத்தமாக  சொல்கிறார்கள்.karate

ஆனால், கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே குடைச்சல் கொடுத்ததின் பின்னணியில் தமிழக காங்கிரஸின் முக்கியப் புள்ளியான ப.சிதம்பரம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.  “அவரது வழிகாட்டலில் தான் நான் இதையெல்லாம் செய்கிறேன்” என்று கராத்தே தியாகராஜன் வெளிப்படையாகவே பேசியும் வருகிறார்.stalin

மக்களவை தேர்தலில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு  சீட் கொடுக்கும் விவகாரத்தில் இழுத்தடித்தது தொடங்கி அனைத்திலும் கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்திவிட்டதாகக் கருதும் ப.சிதம்பரம் சமீப காலமாக பாஜக தலைகளுடன் இணக்கம் பாராட்டுவதாகவும் ஒரு செய்தி கசிகிறது. இதையெல்லால் முடிச்சுப்போட்டுப் பேசும் அவரது எதிரிகள், “சொல்ல முடியாது… தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ப.சிதம்பரம் மீண்டும் தனி இயக்கம் கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனக் கூறுகிறார்கள்.