ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி!

 

ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி!

புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள இயக்குநர் கெளதமன், நடிகர் ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

சென்னை: புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள இயக்குநர் கெளதமன், நடிகர் ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கெளதம் புதிய கட்சியை இன்று ஆரம்பித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்ட கெளதமன், சொந்தமாக கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெளதமன் பேசுகையில், “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பண்பாட்டை வென்றெடுத்த இளைஞர்கள், அரசியலையும் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் அமைப்பை தொடங்குகிறோம். கட்சியின் பெயர் மற்றும் கொடி, தைத் திருநாள் முடிந்த பின்னர் நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும்.

தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை அழிக்க எவர் வந்தாலும் அவர்கள்தான் எங்கள் எதிரிகள். எங்களை பிறர் ஆண்டதெல்லாம் போதும் என்ற நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

gowthaman

தமிழர்தம் கல்வி, மொழி, வளம், மானம், உயிர், கலாச்சாரம், உரிமைகள்,  வாழ்வியல் உள்ளிட்டவை தொலைக்கப்பட்டதால்தான் நாங்கள் அரசியலுக்கு வருகிறோம்.

ரஜினியையும், கமலையும் திரைக்கலைஞர்களாக மிகப்பெரிய அளவில் மதிக்கிறோம். ஆனால் அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம். எங்களைப் போன்று தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்கு ஆதரவாக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து அவர்களால் சிறைக்குச் செல்ல முடியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். எங்கள் இனத்தை, மொழியை காக்கவும், எங்கள் உரிமையை நிலைநாட்டுதற்காகவும் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம்” என்று பேசியுள்ளார் கெளதமன்.