‘ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்தால் சரிப்பட்டு வராது’ : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

‘ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்தால் சரிப்பட்டு வராது’ : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ராஜபாளையத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்,  ரஜினி- கமல் இணைந்து அரசியலுக்கு வருவது குறித்தும் பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ராஜபாளையத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்,  ரஜினி- கமல் இணைந்து அரசியலுக்கு வருவது குறித்தும் பேசினார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது. மற்ற கட்சிகள் அவ்வாறு நின்றால் தான் அவர்களின் திராணி என்னவென்று தெரியும். கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. திமுகவுக்குத் தான் பிரச்னை. அதனால், திமுக கூட்டணி உடையும் என்று தெரிவித்தார். 

rajendra balaji

அதனைத் தொடர்ந்து, ரஜினி அரசியலுக்கு வரக் கால தாமதம் செய்து விட்டார். இனிமேல் அவர் அரசியலுக்கு வந்தால் சரிப்பட்டு வராது. அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ரஜினி- கமல் சேர்ந்தாலும் அவர்களின் ரசிகர்கள் சேர மாட்டார்கள். ரஜினி, கமல் ஒரு  முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். என்ன நடந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும் என்று தெரிவித்தார். 

rajini

முன்னதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர், தேவைப் பட்டால் மக்களின் நலனுக்காக ரஜினியுடன் இணைவேன். நாங்கள் இணைந்தால் அதில் நட்பை விட மக்கள் நலனே முக்கிய செய்தியாக இருக்கும் எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.