ரஜினி இடத்திற்கு யாரும் வரமுடியாது: கலாநிதிமாறன் புகழாரம்!

 

ரஜினி இடத்திற்கு யாரும் வரமுடியாது: கலாநிதிமாறன் புகழாரம்!

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். இனி அந்த இடத்திற்கு யாரும் வரமுடியாது என்று கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். இனி அந்த இடத்திற்கு யாரும் வரமுடியாது என்று கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

vijay

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

rajini

இந்நிலையில் இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேட்ட படத்தின் பாடல்களை ரசிகர்களே தங்களது மொபைல் போன்களின் மூலம் வெளியிட்டனர். அப்போது விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளரும் , சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன், ‘வாரணாசியில் நட்சத்திர ஓட்டலில் தங்காமல் சாதாரண ஓட்டலில் ரஜினிகாந்த் தங்கினார். சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டும் தான். இனி அந்த இடத்திற்கு யாரும் வரமுடியாது. அதே போல் ஆள பாத்து எடை போட கூடாது என்பதற்கு அனிருத் தான்  உதாரணம்’ என்று கூறியுள்ளார்.