ரஜினி, அன்புமணி, டி.டி.வி.தினகரன் ரகசிய கூட்டணி… பாஜக பக்கா ப்ளான்..!

 

ரஜினி, அன்புமணி, டி.டி.வி.தினகரன் ரகசிய கூட்டணி… பாஜக பக்கா ப்ளான்..!

ரஜினி எங்கே அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்கிற ஆத்திரத்தில் பாபா படத்திற்கு முன்பே பயங்கரமாக எதிர்த்து வந்த பாமக இப்போது ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் அவரைப்பற்றி ஒரு விமர்சனம் கூட செய்யவில்லை.

ரஜினி எங்கே அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்கிற ஆத்திரத்தில் பாபா படத்திற்கு முன்பே பயங்கரமாக எதிர்த்து வந்த பாமக  இப்போது ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் அவரைப்பற்றி ஒரு விமர்சனம் கூட செய்யவில்லை. அதற்கான காரணங்கள் இப்போது தெரிய வந்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ரஜினியை போய் டி.டி.வி.தினகரன் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. 

Rajini

அதன் பிறகு நீண்ட இடைவேளை விட்டு சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் பேசியுள்ளார். அப்போது சிறையிலிருக்கும் சசிகலாவைப்பற்றி விசாரித்தவர், அவர் விரைவில் வெளியில் வருவதற்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது இருவரும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த அணியில் ரஜினி, அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் தங்களை முதல்வர் வேட்பாளர்களாகக் கருதுகிறவர்கள். அப்படியிருக்க இம்மூவரும் ஒரே அணியிலிருப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால், இதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். முதலில் மூவரும் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பிறகு யார் அதிகமான எம்.எல்.ஏ.க்களை வென்று எடுக்கிறார்களோ அவர்களை முதல்வராகத் தேர்வு செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை பாஜக முன்வைத்துள்ளதாகச் சொல்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர்.

ttv

ஆனால், இது எந்த அளவுக்கு ஏற்கத்தக்கதாக இருக்கும் என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், பாஜக தரப்பில் இந்த மூவரையும் ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது நிஜம்.