ரஜினி, அஜித், விஜய்யிடம் பிடித்த 3 முக்கியப் பண்புகள்: நடிகர் விவேக் ட்வீட்!

 

ரஜினி, அஜித், விஜய்யிடம் பிடித்த 3 முக்கியப் பண்புகள்: நடிகர் விவேக் ட்வீட்!

‘நான் தான் பாலா’, ‘பாலக்காட்டு மாதவன்’ போன்ற திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுமார் 100 படம் மேல் காமெடி நடிகராக  நடித்தவர் நடிகர் விவேக். இவரின் காமெடியில் பல சிந்திக்க வைக்கும் கருத்து உள்ளதால் அதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி ‘நான் தான் பாலா’, ‘பாலக்காட்டு மாதவன்’ போன்ற திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் விவேக், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்டோரிடம் பிடித்த 3 முக்கிய பண்புகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு.ரஜினிகாந்த். 2.ignore negativity- திரு. விஜய் 3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்’ என்று பதிவிட்டுள்ளார். 

TTN

இதைக்கண்ட ரசிகர்கள் மற்ற நடிகர்களான கமல், சூர்யா, தனுஷ் குறித்தும் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த அவர், கமல்ஹாசன்: சினிமாவின் அனைத்து கூறுகளும் அறிந்த ஒரு மாபெரும் கலை மேதை. விஜயகாந்த் : ஒரு வாழும் வள்ளல். மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் குழந்தை. கலாம் உடல் பார்த்து கண்ணீர் சிந்திய மாமனிதர். விஜய் சேதுபதி: கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பழகுவது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

TTN

இதை  தொடர்ந்து, ‘ தனுஷ் இன்று பலரின் உயர்வுக்கும் இருப்புக்கும் தனுஷ் ஒரு ஏணியாக பாலமாக இருக்கிறார். மிக சிறந்த நடிகர். நம் பெருமை; சூர்யா: தம்பி சூர்யாவை அவர் சிறுவனாக இருக்கும் போதிலிருந்து அறிவேன். அவரது அகரம் மனித மாண்பின் சிகரம்.ஒழுக்கத்தின் உயரம் தொட்டவர். சூரரைப் போற்று மீண்டும் அவரது அரியணையில் அமர்த்தும். நல்லவர் வெல்ல வேண்டும்! சிவகார்த்திகேயன் : நான் விவேக் சாரின் ரசிகன் என்று மேடையில் கூறினார் . அது அவர் பெருந்தன்மை. நடிகர் விக்ரம்: தான் நடிக்கும் பாத்திரத்துக்காக தன் உயிரையும் உடலையும் உழைப்பையும் கொடுப்பது’ என்று பதிலளித்துள்ளார்.