ரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பார்..? லீக்கானது புகைப்படத்தின் பகீர் பின்னணி..!

 

ரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பார்..? லீக்கானது புகைப்படத்தின் பகீர் பின்னணி..!

சிறு துரும்பும் பல் குத்த உதவுமே… அதே போல ரஜினியின் புகைப்படங்களை வைத்து பலனடையப் பார்க்கிறார் மோடி என்கிறார்கள். ஆக, இது ரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பாரா..?

1965ல் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி திரையுலகில் 44 வது ஆண்டில் 167 வது படத்தில் மும்பையில் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறார். 

 1992 பாண்டியன் பாண்டியன் படத்தில் காக்கிச் சட்டையை கழற்றி வைத்தவரை மீண்டும் 25 ஆண்டுகளுக்கு காக்கி உடுப்பை மாட்ட வைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு முன் 1982ல் மூன்று முகம் படத்தில் காக்கி உடுப்பை மாட்டி இருக்கிறார். ​​Rajinikanth

அரசியலில் குதிப்பதில் குழப்பத்தில் இருந்தாலும் சினிமாவில் அவர் தனது தர்பாரை முடித்துக் கொள்வதாய் இல்லை. இதனால் வெறுத்துப்போயுள்ள இரண்டாம் தலைமுறை ரசிகர்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக மும்பையில் நடந்து வரும் ரஜினி, ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் தொடர்ந்து இணையங்களில் பதிவிட உத்தரவிட்டு இருக்கிறாராம் ரஜினி. 

முன்பு அவர் மும்பை படப்பிடிப்பில் மேக் -அப் இல்லாமல் இருந்த ஸ்டில்கள் வெளியாகின.  இப்போது அவரது தர்பார் கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.  

இந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  கருப்பு ஜீன்ஸ், பிரவுன் சட்டை அணிந்து கும்பிட்டபடியே ஒரு வணிக வளாகத்துக்குள் நுழையும் சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ​​Rajinikanth

படப்பிடிப்பு தளத்துக்கு நுழைவதற்கு பயங்கர கெடுபிடிகள் இருப்பதால் படத்தில் பணிபுரிபவர்களில் ஒருவர் தொடர்ந்து இந்தப்புகைப்படங்களை வெளியிட்டு விட்டதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ரஜினியே தனது புகைப்படங்களை வெளியிட படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. காரணம், ரசிகர்களை தக்க வைப்பது மட்டுமல்ல…  நடைபெற்று வரும் தேர்தலும்தான்.

ரஜினி இந்திய அளவில் கவனிக்கப்பட்டு வரும் நட்சத்திரம். அத்தோடு பாஜகவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுபவர். இந்த நிலையில் அவரது புகைப்படங்கள் வைரலாகும் போது அது  சாதகமாக அமையும் என்பதால், மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் போது, இந்தப் புகைப்படங்களை வெளியிட ரஜினியிடம் பாஜக கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Rajinikanth

இந்தப்புகைப்படங்களை வெளியிடுவதால் மட்டும் பாஜகவின் வெற்றி தீர்மானமாகி விடாது. இருந்தாலும் பாஜகவுக்கு ஒரு அட்ராக்சனை தருமே…  சிறு துரும்பும் பல் குத்த உதவுமே… அதே போல ரஜினியின் புகைப்படங்களை வைத்து பலனடையப் பார்க்கிறார் மோடி என்கிறார்கள்.

ஆக இது ரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பாரா..?