ரஜினியை வைத்து மீண்டும் ஒரு வேதாளமா? ‘கீர்த்தி சுரேஷ்’ தங்கைன்னா அப்போ மீனா – குஷ்பூ யாருப்பா?

 

ரஜினியை வைத்து மீண்டும் ஒரு வேதாளமா? ‘கீர்த்தி சுரேஷ்’ தங்கைன்னா அப்போ மீனா – குஷ்பூ யாருப்பா?

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.   இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது.

ttn

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை   கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பெரிய டிவிஸ்ட்டாக கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறாராம். அப்போ மீனா மற்றும் குஷ்பூக்கு என்ன வேடம் என்று  தானே யோசிக்கிறீங்க… மீனாவும் குஷ்பூவும் ரஜினியின் மனைவிகளாக நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

ttn

மேலும் இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும்  இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கலன்று ரிலீஸாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.