ரஜினியை வளர்த்துவிட வேண்டாம்… ஸ்டாலினுக்கு வந்த ஸ்டிரிக்ட் ஆர்டர்!

ரஜினியை வளர்த்துவிட வேண்டாம்… ஸ்டாலினுக்கு வந்த ஸ்டிரிக்ட் ஆர்டர்!

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு தி.மு.க மீது தாக்குதல் நடத்துவதையே முக்கியமாக வைத்துள்ளார். இதற்கு தி.மு.க பதில் தாக்குதல் அளிக்கவே அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது. துக்ளக் விழாவில் தேவையின்றி தி.மு.க-வை சீண்டினார் ரஜினிகாந்த். ஸ்டாலின், உதயநிதி தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை ரஜினி மீது பாய்ந்தார்கள். இதுவே அவருக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியை ஏற்படுத்தியது.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பதில் சொல்லாமல் புறக்கணிப்பதே சிறந்தது என்று பிரஷாந்த் கிஷோர் கொடுத்த அட்வைஸை பின்பற்றியே ரஜினி பற்றி பேசுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு தி.மு.க மீது தாக்குதல் நடத்துவதையே முக்கியமாக வைத்துள்ளார். இதற்கு தி.மு.க பதில் தாக்குதல் அளிக்கவே அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது. துக்ளக் விழாவில் தேவையின்றி தி.மு.க-வை சீண்டினார் ரஜினிகாந்த். ஸ்டாலின், உதயநிதி தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை ரஜினி மீது பாய்ந்தார்கள். இதுவே அவருக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியை ஏற்படுத்தியது.

rajinikanth 12a

லீலா பேலசில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாதுரையை புகழ்ந்து பேசினார். அடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினி, தன்னுடைய கருத்து சுழலாக உருவாகிவிட்டது, தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும் என்று கூறினார். அந்த கூட்டத்திலும் எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதால் அனுதாப அலை உருவானது என்று தி.மு.க-வை விமர்சித்துப் பேசினார்.
ஆனால் இதற்கு எல்லாம் தி.மு.க தரப்பிலிருந்து பெரிய அளவில் கமெண்ட் வரவில்லை. தி.மு.க-வுக்கு என்ன ஆயிற்று, பொங்கித் தீர்த்திருப்பார்களே, ஏன் அமைதி காக்கின்றனர் என்று தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

prashant-kishor-dmk

அப்போது, ரஜினிக்கு எதிர்க்கருத்து தெரிவிக்க தெரிவிக்க அவரை மீடியாக்கள் தூக்கிப் பிடிக்கின்றன. நடிகர் கமல் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விடாமல் பேட்டி கொடுத்து கொடுத்து அவரை பெரிய ஆள் ஆக்கி, அரசியலுக்கு இழுத்துவிட்டார். அதே போன்ற தவற்றை ரஜினிகாந்த்திடம் செய்துவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலினுக்கு பிரஷாந்த் கிஷோர் அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பின்பற்றியே ரஜினிகாந்த் பற்றி தி.மு.க தரப்பில் யாரும் பேசவில்லை என்று தெரிவித்தனர்.
பிரஷாந்த் கிஷோர் கூறியது போலவே ரஜினியின் பேட்டி மற்றும் விருது விழா பேச்சு பெரிய அளவில் மக்கள் மத்தியில் செல்லவில்லை. இனி, இப்படி கருத்துக் கூறி மற்றவர்களை வளர்த்துவிடுவதை விட தேர்தல் வேலையைப் பார்ப்போம் என்று நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறாராம் ஸ்டாலின்.