ரஜினியை பார்ப்பதால் ஒன்றும் நடந்துவிடாது! – காங். தலைவர் அழகிரி அட்வைஸ்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏ-வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தன்னிடம் விளக்கலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும் ரஜினிகாந்தை சந்தித்து அதுபற்றி விளக்கம் அளித்து வருகின்றன. அவர்கள் கூறிய கருத்துக்கள் பற்றி பிரதமர் மோடியிடம் கூற உள்ளதாகவும் ரஜினி அறிவித்துள்ளார்.

சிஏஏ பற்றி விளக்கம் கூற நடிகர் ரஜினிகாந்த்தை சந்திப்பது எல்லாம் வீண் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏ-வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தன்னிடம் விளக்கலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும் ரஜினிகாந்தை சந்தித்து அதுபற்றி விளக்கம் அளித்து வருகின்றன. அவர்கள் கூறிய கருத்துக்கள் பற்றி பிரதமர் மோடியிடம் கூற உள்ளதாகவும் ரஜினி அறிவித்துள்ளார்.

raini-meeting-with-muslim-leader

ரஜினியின் அறிவிப்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “இஸ்லாமிய அமைப்புகள் ரஜினியை சந்தித்து பேசுவதால் எந்த பயனும் இல்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என யாரும் ரஜினியின் பேச்சை கேட்கமாட்டார்கள்” என்றார்.