ரஜினியை பழிவாங்கத் துடிக்கும் பிரஷாந்த் கிஷோர்… திமுகவுடன் சேர்ந்து திடுக் திருப்பம்..!

 

ரஜினியை பழிவாங்கத் துடிக்கும் பிரஷாந்த் கிஷோர்… திமுகவுடன் சேர்ந்து திடுக் திருப்பம்..!

ஊடகங்களும் ரஜினி வெறுப்பாளர்களும் ரஜினிதான் கிஷோர் பின்னால் போவதாக கூறினர். ஏன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட அதைக் கிண்டலடித்தார்.

தேசிய அளவில், தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதில் பிரபலமானவர், பிரசாந்த் கிஷோர். இவரது தலைமையிலான, ‘ஐ பேக்’ என்ற, ‘மார்க்கெட்டிங்’ நிறுவனம், தற்போது, தி.மு.க.,வுக்காக, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.தி.மு.க.,வின் செல்வாக்கை, தமிழக மக்களிடம் எப்படி வளர்ப்பது; எந்தெந்த ஜாதி ஓட்டுக்களை வளைப்பது; எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால் பலம், பலவீனம் என கண்டறிவது. தகுதி படைத்த வேட்பாளர்களை தேர்வு செய்வது எப்படி போன்ற, பல்வேறு தேர்தல் களப் பணிகள் தொடர்பான நிலவரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப வெற்றி வியூகத்தை வகுக்கும் பணிகளில், பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார்.

prashant kishor

இந்த நிலையில் பிராசாந்த் கிஷோர் திமுகவிடம் அண்டியது எப்படி என்கிற தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ’ஓடும் குதிரையின் பக்கம் ஓடக்கூடியவர் கிஷோர். சமீபத்திய நாடளுமன்றத்தேர்தலில் அவரின் பாச்சா பலிக்காமல் பின்னடைவு ஏற்பட்டதால் தனக்கு ஏறுமுகம் தரும் ஒரே நபர் ரஜினி என எண்ணி அவரின் வாசலில் நின்றார்.Rajini

ஊடகங்களும் ரஜினி வெறுப்பாளர்களும் ரஜினிதான் கிஷோர் பின்னால் போவதாக கூறினர். ஏன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட அதைக் கிண்டலடித்தார். உண்மையில் நடந்தது வேறு. அவரிடம் ரஜினி போகவில்லை. பிரசாத் கிஷோர் தான் ரஜினியின் பின் அலைந்தார்.

தன்னை புறக்கணித்த ரஜினியை பழிவாங்க வேண்டிய கட்டாயமும் தன்னை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையும் கிஷோருக்கு ஏற்பட்டது’’ என்கிறார்.