ரஜினியைக் கிண்டல் செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஜெயம் ரவி

 

ரஜினியைக் கிண்டல் செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஜெயம் ரவி

கோமாளி படத்தில் ரஜினியைக் கிண்டல் செய்வது போல் வெளியானதற்கு ஜெயம் ரவி வருத்தம் தெரிவித்துள்ளார். 

ரஜினியைக் கிண்டல் செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஜெயம் ரவி

சென்னை: கோமாளி படத்தில் ரஜினியைக் கிண்டல் செய்வது போல் வெளியானதற்கு ஜெயம் ரவி வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கோமாளி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயின்னாக நடிக்க இயக்குநர் பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். 9வித கேட்பதில் நடித்துள்ள ஜெயம் ரவியின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. மிகவும் நகைச்சுவையாக வெளியான அதில் ஜெயம் ரவி, 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து 2016ல் தான் கண் விழிக்கிறார். அதை அவரின்  நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார். அதனால் அவரை நம்பவைக்கக் குறிப்பிட்ட சீன்னில் அந்த காலம் முதலே ரஜினி அரசியலுக்கு வருவேன் என கூறி வருவதை விமர்சனம் செய்வது போல் இருந்தது. அதை கண்ட ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவேசப்பட்டு இயக்குநரை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷைத் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து அக்காட்சிகள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஜெயம் ரவி தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘கோமாளி படத்தின் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ரஜினி சார் தொடர்பான காட்சி, அவரின் ரசிகர்களின் உணர்வுகளைத் துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது.

 அந்த விஷயம் நேர்மறையாகச் சித்திரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவருடைய ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடன்  எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது அவரையோ, அவருடைய ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது. படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு படக்குழுவை ரஜினிகாந்த் மனமாரப் பாராட்டியபோது அவர் மீதான மரியாதை பலமடங்கு அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.