ரஜினியும், கமலும் மோத மாட்டார்கள்… இருவருக்குமே பொது எதிரியாக திமுகவும் அதிமுகவும் தான்!

 

ரஜினியும், கமலும் மோத மாட்டார்கள்… இருவருக்குமே பொது எதிரியாக திமுகவும் அதிமுகவும் தான்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்கும் வண்ணம், புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில், ஆறு பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியல் முதலில் வெளியிடப்படுகிறது’ என்று சொல்லப்பட்டிருந்தது. நமது டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்கு ஏற்கெனவே இந்த செய்தியை நாம் தெரிவித்து,

ரஜினியும், கமலும் மோத மாட்டார்கள்… இருவருக்குமே பொது எதிரியாக திமுகவும் அதிமுகவும் தான்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்கும் வண்ணம், புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில், ஆறு பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியல் முதலில் வெளியிடப்படுகிறது’ என்று சொல்லப்பட்டிருந்தது. நமது டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்கு ஏற்கெனவே இந்த செய்தியை நாம் தெரிவித்து, மோடிக்காக பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தான் தற்போது மக்கள் நீதி மய்யத்தில் அதிரடி மாற்றங்களுக்கு உத்தரவிட்டு, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து கொடுத்திருக்கிறார் என்று சொல்லியிருந்தோம்.

இதற்கிடையே, ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்தில் பொறுப்பில் இருந்த நடிகைகள் ஸ்ரீபிரியா, கோவை சரளா ஆகியோரின் செயல்பாடுகள் மீது கமலுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று காதை கடிக்கிறார்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் விசுவாசிகள். அதனால் தான் அவசர அவசரமாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபல குடும்பத்தின் உமாதேவி என்பவரை, பொதுச்செயலாளராக அறிவித்துள்ளார் கமல் என்கிறார்கள்.

“என்னுடைய தொழிற்சாலையில் ஏராளமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இதனால், பெண்களின் நிலையை நன்கு அறிவேன். அதைப் பற்றி தலைமைக்குச் சில கருத்துகளை அனுப்பியிருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்திருக்கலாம்” என்கிறார் உமாதேவி. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மெளரியா, ஐ.ஏ.எஸ் அதிகாரி பஷீர் அகமது உள்ளிட்டோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்யும் போது, கூடவே  இன்னும் சில நாட்களில் வேறு சில அறிவிப்புகளும் வரவுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் வாங்கியுள்ள மக்கள் நீதி மய்யம், சட்டசபை தேர்தலில் ரஜினியும் களமிறங்க இருப்பதால், இப்போதிலிருந்தே அதற்கான வியூகங்களை வகுத்து, ‘ஆபரேஷன் 500’ என்ற புதிய திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. சத்தமில்லாமல் இன்னொரு பக்கம் ரஜினியும் தன் ரசிகர் மன்றத்தினரிடையே ஒவ்வொரு தொகுத்திக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தொகுதி பிரச்சனைகள், தொகுதிக்குள் திராவிட கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் குளறுபடிகள் என பெரிய பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார் ரஜினி!

ரஜினியின் மனதில், தேர்த்தல் சமயத்தில் சீமான், கமல் ஆகியோரைப் பற்றி விமர்சிக்கும் திட்டமே கிடையாதாம். இந்த தேர்தலில் மக்களை சந்தித்து, இரு திராவிட கட்சிகளைப் பற்றி மட்டுமே எதிர்பிரச்சாரம் செய்து சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால், மய்யத்தில் ரஜினியின் போக்கிற்கேற்ப சட்டசபை பிரச்சாரங்களுக்கான திட்டங்கள் எல்லாம் கூட ஏற்கெனவே வகுத்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.