ரஜினியுடன் இணையும் டி.இமான்!

 

ரஜினியுடன் இணையும் டி.இமான்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கவுள்ளதாக சன் பிக்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 168 படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கவுள்ளதாக சன் பிக்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

rajinikanth 168

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

ரஜினியின் படங்களுக்கு தொடர்ந்து அனிருத்தே இசையமைத்து வந்த நிலையில் முதன்முறையாக ரஜினியுடன் இமான் கைக்கோர்கிறார். அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அனிருத் வேண்டாம் யுவன் அல்லது இமான் தான் வேண்டும் என கேட்டுக்கொண்டதாம்.