ரஜினியுடன் அதிமுக கூட்டணி? அமைச்சர் கடம்பூர் ராஜூ!

 

ரஜினியுடன் அதிமுக கூட்டணி? அமைச்சர் கடம்பூர் ராஜூ!

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். 

ரஜினியுடன் அதிமுக கூட்டணி? அமைச்சர் கடம்பூர் ராஜூ!

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், விடுதலைப் புலிகள் தடை எல்லாம் முடிந்து, அந்தப் பிரச்சனை முற்றுப் பெற்றிருக்கிறது. மீண்டும் இதே பிரச்சினையை வைகோவை கிளப்புகிறார். அவர் சாதாரணமாக வைகோ இருந்தால் இதை பேசி இருக்கலாம். இன்றைக்கு அவர் எம்.பியாக உள்ளார். இதுபோன்ற கருத்துகளை சொல்வது சரியாக இருக்கிறதா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு, ரஜினி படத்தை அதிகளவில் பார்த்தேன். மற்றபடி அரசியலுக்கும் அவர் வருவதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அரசியலுக்கு வருவது அவரது சொந்த முடிவு. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிமுக அவருடன் கூட்டணி அமைக்குமா என்பதை நேரம் வரும்போது பார்த்து கொள்ளலாம்” என்று கூறினார்.