ரஜினியின் நேர்மை பற்றி பேசிய கமல்! – வழக்கமான குழப்பப் பேச்சு

 

ரஜினியின் நேர்மை பற்றி பேசிய கமல்! – வழக்கமான குழப்பப் பேச்சு

தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள் என்றால் பணம் மட்டும் இல்லை… அவரது நேர்மையையும் முதலீடு செய்யலாம் என்ற அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள் என்றால் பணம் மட்டும் இல்லை… அவரது நேர்மையையும் முதலீடு செய்யலாம் என்ற அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்த கமலின் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு கமல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“2021ம் ஆண்டு எங்கள் இலக்கு. இந்த பயணத்துக்கான படிக்கட்டாகத் திருச்சியிலும் எங்கள் தலைமை அலுவலகத்தைத் தொடங்கியுள்ளோம். தலைமையை நோக்கி மக்கள் வர வேண்டும் என்பதை தவிர்த்து, மக்களை நோக்கி தலைமை செல்ல வேண்டும் என்பதற்கான ஆரம்பம் இது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது எங்களுக்கு பின்னடைவு இல்லை. திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தேர்தலில் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம். நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியமே” என்றார்.

kamal haasan

ரஜினிகாந்த் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் சில கமல் கூறியிருந்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “முதலீடு என்றால் பணம் மட்டும் அல்ல… நேர்மையை முதலீடு செய்யலாம். அதற்கான முயற்சியில் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது. ரஜினியை எங்கள் கட்சியில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. எங்களது நல்ல நோக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளோம்.
யாருடன் கூட்டணி என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். 2021ல் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து பி கட்சிகள் எங்களுடன் வருவதற்கான வாய்ப்ப உள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று கூற முடியாது. மக்கள் மனதில் தலைமைக்கான இடம் உள்ளது. அதற்கு தகுதியானவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.