ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ் எப்போ தெரியுமா? 10 நாள் கொண்டாட்டம்…!

 

ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ் எப்போ தெரியுமா? 10 நாள் கொண்டாட்டம்…!

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்த நிலையில், தர்பார் வெளியீட்டு தேதியை அறிவித்தது லைக்கா நிறுவனம். தர்பார் படத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஜோடியாக நயன்தாரா நடித்திருத்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

darbar

சமீபத்தில் ரஜினியின் டப்பிங் பகுதிகள் முழுவதையும் நான்கே நாட்களில் ரஜினி முடித்துக் கொடுத்துள்ளதாக ட்விட்டரில் படத்தின் இயக்குநர் முருகதாஸ் பதிவிட்டிருந்தார். பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த தர்பார் படத்தின் பணிகள் வேகமாக  முடிந்து வருவதால் ஜனவரி 9ம் தேதியே தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழு தயாராகி வருகிறது. 

darbar

தங்கள் தலைவரின் தர்பார் படம் பொங்கலுக்கு முன்கூட்டியே வெளிவர இருப்பதால் தர்பாரை வரவேற்க இப்போதே ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தர்பார் படம் ரிலீஸாவதால் இந்த தேர்தலில் ரஜினி ரசிகர்களின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.