ரஜினியின் ‘தர்பார்’ புதிய போஸ்டர் ரிலீஸ்!

 

ரஜினியின் ‘தர்பார்’ புதிய போஸ்டர் ரிலீஸ்!

தீபாவளியை முன்னிட்டு தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 

darbar

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.ரஜினிகாந்த்  காவலராக நடித்துள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.மேலும் தர்பார் படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. 

 

இந்நிலையில் இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி  வருகின்றனர். 

முன்னதாக  வரும் நவம்பர் 7 ஆம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.