ரஜினியின் கட்சிப் பெயர் எப்போது அறிவிப்பு? பரபரப்பு தகவல்

 

ரஜினியின் கட்சிப் பெயர் எப்போது அறிவிப்பு? பரபரப்பு தகவல்

ரஜினி தனது கட்சியின் பெயரை எப்போது வெளியிடவுள்ளார் என்ற பரபரப்பு தகவலை அவரது நண்பரும், புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்

சென்னை: ரஜினி தனது கட்சியின் பெயரை எப்போது வெளியிடவுள்ளார் என்ற பரபரப்பு தகவலை அவரது நண்பரும், புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து களமிறங்குவோம் என்றார். ஆனால், அவரது கட்சியின் சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அதேசமயம், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி அதற்கான நிர்வாகிகளை மாவட்ட வாரியாக நியமிக்கும் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் படப்பிடிப்பு பணிகளிலும் ரஜினி பிஸியாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில், ரஜினி தனது கட்சியின் பெயரை எப்போது வெளியிடவுள்ளார் என்ற பரபரப்பு தகவலை அவரது நண்பரும், புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தனது கட்சியின் பெயரை ரஜினி வெளியிடுவார் எனவும், அவரது கட்சியுடன் இணைந்து புதிய நீதி கட்சி பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், ஏ.சி.சண்முகத்தின் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழத்தின் 30-வது ஆண்டு விழாவுடன் சேர்த்து கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ரஜினி, தமிழகத்துக்கு நல்ல தலைவன் தேவை. தலைமை தேவை. தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை நிரப்பவே அரசியலுக்கு வருகிறேன். எனக்கு என்று சில கடமைகள் உள்ளது. அதனால் அரசியலுக்கு வருகிறேன். எம்ஜிஆர் கொடுத்த சாமானியருக்கான நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று சூளுரைத்தார்.