ரஜினியின் அடுத்த படத்திலும் இணைந்த நயன்தாரா!

 

ரஜினியின் அடுத்த படத்திலும் இணைந்த நயன்தாரா!

ரஜினியுடன் தர்பார் படத்தில் ரொமான்ஸ் செய்த நயன்தாரா, இப்போது மறுபடியும், சிறுத்தை சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ரஜினியுடன் தர்பார் படத்தில் ரொமான்ஸ் செய்த நயன்தாரா, இப்போது மறுபடியும், சிறுத்தை சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

thalaivar-168-update

பெரிய ஹீரோ படங்களில் மாஸ் இருப்பது எவ்ளோ முக்கியமோ அது போல நயன்தாராவும் இருக்கவேண்டும் என்பது கோலிவுட்டில் எழுதப்படாத சட்டமாகிவிட்டது. வருகின்ற அத்தனை பெரிய ஹீரோ படங்களிலும் அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, இல்லையோ? அதில் நயன்தாராவை நடிக்க வைத்துவிடுகிறார்கள். 

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தலைவர் 168’ என்ற படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் ரஜினியுடன் நடிகை மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் சதிஷ் போன்ற நட்சத்திரங்கள் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. இதைத் தொடர்ந்து இப்பொது நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக சன் பிக்ச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

 

நயன்தாரா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே 2005-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தரா நடித்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் தர்பாரிலும் நடித்திருந்தார். 

இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய D.இமான் இசையமைக்கிறார். 

நயன்தாரா தற்போது ‘அவள்’ இயக்குனர் மிலிந்த் ராவின் நெற்றிக்கண் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது