ரஜினியால் நிலையான அரசியல் கட்சியை நடத்தவே முடியாது: ஆர்.எம்.வீரப்பன் அதிரடி

 

ரஜினியால் நிலையான அரசியல் கட்சியை நடத்தவே முடியாது: ஆர்.எம்.வீரப்பன் அதிரடி

நடிகர் ரஜினிகாந்தால் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் ரஜினிகாந்தால் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பனும், நடிகர் ரஜினிகாந்தும் மிக நீண்ட காலமாக நட்பில் இருந்து வருபவர்கள். பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசியதில் கோபப்பட்டு, ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஆர்.எம்.வீரப்பன். அந்த சமயத்தில், ஆர்.எம்.வீ.யுடன் சேர்ந்து ரஜினி கட்சி தொடங்குவார் என்ற செய்திகள் எல்லாம் பரவியது.

rajini

ஆனால், அன்று முதல் இன்று வரை அது வெறும் செய்தியாகவே இருந்து வருவதை பார்க்க முடிகிறது. பல சமயங்களில் கட்சி தொடங்கும் சூழல் இருந்தும், அதனை திட்டமிட்டே தவிர்த்து வருகிறார் ரஜினி.

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எம்.வீரப்பன், “ரஜினிகாந்த் எனக்கு மிக வேண்டிய, நெருங்கிய நண்பர். அவர் மிக சிறந்த நடிகர். நல்ல மனிதர், சிந்தனையாளர், ஆன்மிக உணர்வாளர், பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடுபவர். ஆனால், நிலையான ஒரு அரசியல் கட்சியை அவரால் நடத்தவே முடியாது” என கூறியுள்ளார். 

ரஜினிக்கு மிக நெருக்கமானவராக பார்க்கப்படும் ஆர்.எம்.வீரப்பனின் இந்த பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே ஒரு வித சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். கழக தொண்டர்கள் தங்களின் முழு ஆதரவையும் வழங்குவார்கள் என்றும் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.