ரஜினியால் ஏற்பட்ட இத்தனை கோடி நஷ்டம்…சண்டிகருக்கு ஷிஃப்ட் ஆகிறது ‘தர்பார்’படக்குழு…

 

ரஜினியால் ஏற்பட்ட இத்தனை கோடி நஷ்டம்…சண்டிகருக்கு ஷிஃப்ட் ஆகிறது ‘தர்பார்’படக்குழு…

தர்பார்’ படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் பிரகாரம் அப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் மும்பையில், முக்கியமாக ஒரு கல்லூரியில் நடப்பதாகவே இருந்தது

மும்பையில் தொடங்கிய ‘தர்பார்’படத்தின் முதல் ஷெட்யூல் பெர்ஃபெக்டாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது ஷெட்யூல் படு சொதப்பலாக நடந்துவருவதாகவும் மழை உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு விரைவில் சண்டிகருக்கு ஷிஃப்ட் ஆகவிருப்பதாகவும் அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

darbar

’தர்பார்’ படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல் பிரகாரம் அப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் மும்பையில், முக்கியமாக ஒரு கல்லூரியில் நடப்பதாகவே இருந்தது. முதலில் கல்லூரி மாணவர்களுடன் நடந்த சின்னஞ்சிறு மோதல்களையும் மீறி முதல் ஷெட்யூல் திட்டமிட்டபடி முடிந்தது. ஆனால் இரண்டாவது ஷெட்யூலை நிறுவனம் திட்டமிட்டபடி தொடங்கமுடியவில்லை. முதல் காரணம் ரஜினி. தேர்தல் முடிவுகளுக்காக ஷெட்யூல் தேதிகளை தள்ளிப்போட்ட அவர் அடுத்து மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பிறகே படப்பிடிப்புக்கு வந்தார்.

darbar

ரஜினியால் ஏற்பட்ட இந்த கேப் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட தற்போது மும்பையில் மழை தனது கடமையைத் தொடங்கிவிட்டது. ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர் ஆகிய 4 மாதங்களிலும் மும்பையில் மழை வெளுத்து வாங்கும். எனவே வேறு வழியின்றி இன்னும் ஓரிரு தினங்களில் மும்பையிலிருந்து சண்டிகருக்கு ஷிஃப்ட் ஆகிறது தர்பார். ரஜினி நடுவில் எடுத்துக்கொண்ட கேப்பால் தயாரிப்பு நிறுவனத்துக்கு சுமார் 2 கோடிக்கும் மேல் வீண் செலவு ஏற்படும் என்கிறது படக்குழு.