ரஜினியால் இந்திய அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம்… கலக்கத்தில் ஸ்டாலின்..!

 

ரஜினியால் இந்திய அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம்… கலக்கத்தில் ஸ்டாலின்..!

தமிழகத்தில் தேர்தல் என்று வந்தால் திமுகவுக்கு ரஜினி பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதால்தான் , ரஜினியைச் சீண்டி உதயநிதி அண்மையில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

ரஜினிக்காக பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள் இளவு காத்த கிளியாக காத்திருந்து ஏமாந்து விட்டது பாஜக. ஒன்று பாஜகவில் இணைய வேண்டும் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்தால் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று ரஜினியிடம் அமித் ஷா தொடர்ந்து வலியுறுத்தியும் இன்னமும் கழுவிய மீனில் நழுவிய மீனாகவே இருக்கிறார். ரஜினி அவ்வப்போது வெளிப்படுத்தும் கருத்துகளை வைத்து அவர் பாஜக சார்பாக இருக்கிறார் என்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகின்றன. அப்படியென்றால் தமிழகத்தில் தங்களுக்கு முக்கியமான ரஜினியை ஏன் மோடி வாழ்த்தவில்லை?Rajinikanth

இந்தக் கேள்வி ’’சில வாரங்களாகவே ரஜினியோடு காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். ரஜினிக்கு காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான நண்பர்கள் உண்டு. கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து ரஜினியோடு பேசி வருகிறார்கள். ஏ.கே.அந்தோனி, மராட்டியத்தில் சுப்ரியா சுலே போன்றவர்கள் ரஜினியோடு பேசி பாஜக உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் பேசியதைப் பற்றி ரஜினி தனக்கு நம்பிக்கையான தமிழ்நாட்டு அரசியல் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அவர்கள், ‘பாஜகவோடு நீங்க கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டுல உங்களால் எதுவும் செய்ய முடியாது. பாஜகவுக்கு ஏற்கனவே தமிழகத்தில் செல்வாக்கு இல்லை.chidambaram

 ரஜினி என்றால் மதங்களைக் கடந்த ஆன்மிகவாதி என ஒரு நற்பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸோடு நீங்க சேர வேண்டும். நீங்க சம்மதித்தால் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும். ரஜினியோடு காங்கிரஸ் வருவதாக இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து மேலும் சில கட்சிகளும் கூட வரலாம். காங்கிரஸின் தேசியம்தான் இப்போது உங்களுக்குச் சரியாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கம்போல் ரஜினி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, ‘பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.Rajini

தமிழகத்தில் தேர்தல் என்று வந்தால் திமுகவுக்கு ரஜினி பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதால்தான் , ரஜினியைச் சீண்டி உதயநிதி அண்மையில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதுபற்றி ரஜினி பதில் அளிக்கவில்லை என்றாலும் கடுங்கோபத்தில் இருக்கிறார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றிவிட்டால் திமுகவின் தார்மிக பலம் குறையும் என்ற கணக்கும் ரஜினி வட்டாரத்தில் போடப்படுகிறது. ரஜினியை ஏதோ பாஜகவின் ஆள் என்று பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியின் தொடர்பு எல்லைக்குள் காங்கிரஸ் இருப்பதே ஆச்சரியமான அரசியல் நகர்வுதான்.