ரஜினியாக சூர்யா…கமலாக தனுஷ்: மீண்டும் வருகிறது ‘அவள் அப்படித்தான்’ !?

 

ரஜினியாக சூர்யா…கமலாக தனுஷ்:  மீண்டும் வருகிறது ‘அவள் அப்படித்தான்’ !?

 அதை ருத்ரயா தர மறுத்துவிட்டாராம். காரணம் அதில் நடிக்க போகும் நடிகர்கள் பட்டியல்  அவருக்கு திருப்திகரமாக இல்லாததேயாகும்

தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடித்திருக்கும் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது  அவள் அப்படித்தான். 1978 ஆம் ஆண்டு இயக்குநர்  ருத்ரயா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நடிகை ஸ்ரீ பிரியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ttn

இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க ஸ்ரீ பிரியா முயற்சித்த போது  அதை ருத்ரயா தர மறுத்துவிட்டாராம். காரணம் அதில் நடிக்க போகும் நடிகர்கள் பட்டியல்  அவருக்கு திருப்திகரமாக இல்லாததேயாகும்.

ttn

இந்நிலையில் இயக்குநர்  ருத்ரயா இறப்பதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா  அவள் அப்படித்தான் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். அப்போது த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பணிபுரிந்து கொண்டிருந்ததால் இதை இயக்க முடியவில்லையாம்.

tt

இந்நிலையில் தற்போது அவள் அப்படித்தான்  ரீமேக்கை இயக்கும் பணிகளை கையில் எடுத்துள்ளார் நடிகை ஸ்ரீபிரியா. இதில் ரஜினி வேகத்தில் சூர்யாவும்,  கமலாக தனுஷும் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் அடித்த பாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க  வேண்டும் என்று எண்ணியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.