ரஜினிக்கு விருது- ஒரு கோஷ்டி கமலையும் எம்ஜிஆரையும் நக்கலடிச்சிகிட்டு இருக்காங்க..!?.

ரஜினிக்கு விருது- ஒரு கோஷ்டி கமலையும் எம்ஜிஆரையும் நக்கலடிச்சிகிட்டு இருக்காங்க..!?.

கமல், குழந்தை நட்சத்திரத்திலேயே இரு மொழிகளில் டபுள் ஆக்ட் குடுத்த மொத ஆளு, டான்சர், ஹீரோ, தயாரிப்பாளர், டைரக்டர் , பாடலாசிரியர், கதை, திரைக்கதை வசன கர்த்தா, பின்னனி பாடகர்

சிறந்த நடிகர்னு தேசிய விருதை மூணு முறை வாங்கினவரு. நாலு மொழிகள்ல பிலிம்பேர் அவார்டை மொத்தம் 17 தடவை வாங்கி, இனிமே எனக்கு விருதே தராதீங்க, மத்தவங்களுக்கு குடுங்கன்னு சொன்னவரு..அவரோட விருது லிஸ்ட்டே அம்மாம்பெருசா இருக்கும்

kamal

அறுவது வருஷமா நடிச்சிகிட்டு இருக்காரு.. இந்தியாவுல இருந்து ஆஸ்காருக்கு அதிகமுறை போனது கமலோட படங்கள்தான்

நமக்கு தெரிஞ்சி இந்தியன் சினிமாவை பொறுத்த வரை, அதன் அத்தனை தளங்களிலும் மூக்கை நுழைத்து புகுந்து விளையாட தெரியும் அளவுக்கும் தவறுகளை கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு்ம் சாதித்தவர்கள் பேர்..

முதல் ஆள் இந்தி ஜாம்பவான் நடிகர் ராஜ்கபூர், தி கிரேட்டஸ்ட்டு ஷோமேன் என்று பெருமையை பெற்றவர். வெளிநாடுகளில் இந்தியன் சினிமா பாக்ஸ் ஆபிசுக்கு வித்திட்டவர்.

kamal and rajni

இன்னொருவர் நடிகர், தயாரிப்பாளர் இயக்குர் அவதாரமெடுத்த மக்கள் திலகம் எம்ஜிஆர். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் போன்றவை அவருடைய சினிமா டெக்னீஷியன் திறமைகளை பறைசாற்றும். நடிப்பதை தவிர்த்து ஒவ்வொரு படத்திலும் கேமிரா ஆங்கிள், பாடல்வரிகள் இசை எடிட்டிங் என அவர் பார்த்து ஓக்கே சொல்லாமல் மேற்கொண்டு நகராது..

மூன்றாவது ஆள் நம்ம உலக நாயகன் கமலஹாசன்.

கமர்சியல் சக்சஸை தாண்டி ரிஸ்க் எடுப்பதற்கு அஞ்சாதவர்கள் இந்த கோஷ்டி .

@ஏழுமலை வெங்கடேசன்