ரஜினிக்கு பிறகு யாரு? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!

 

ரஜினிக்கு பிறகு யாரு? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!

ரஜினிகாந்துக்கு பிறகு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுப்பது யார் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் பெயரை, ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: ரஜினிகாந்துக்கு பிறகு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுப்பது யார் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் பெயரை, ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் செக்கச் சிவந்த வானம் ,சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகின.தற்போது இவர்  சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா, கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்கள் டிவிட்டரில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார். அதில், உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் என்ற கேள்விக்கு,ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி என்று பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்தை அடுத்த பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுப்பதில் கிங் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்த போது,   தளபதி விஜய் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.