ரஜினிக்கு பதில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி… மோடி அதிரடி வியூகம்..!

 

ரஜினிக்கு பதில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி… மோடி அதிரடி வியூகம்..!

ஒருவேளை ரஜினியும் அரசியலுக்கு வந்தால் அண்ணாச்சிக்கு முதல்வர் பதவி, ரஜினி துணை முதல்வர் ஆக்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறதாம் பாஜக.

காமெடியா இருக்கும் ஆனால், சீரியஸா படியுங்கள்… அதோ வருகிறேன்… இதோ வருகிறேன் என பம்மாத்து காட்டி வரும் ரஜினியை நம்புவதை விட  அடுத்த சாய்ஸாக சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சியை தேர்வு செய்வதை தவிர மோடிக்கு வேறு வழியே இல்லை. Arul

170 படங்களில் ரஜினி நடித்த புகழை வெறும் 5 விளம்பரங்களில் மட்டுமே நடித்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்று விட்டார். அதனால் தான் அடுத்த சாய்ஸாக மோடி அண்ணாச்சியை டிக் அடித்து இருக்கிறார். 
 
விளம்பரங்களில் நடித்து வந்த  சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அடுத்து திரையுலகில் நாயகானாக கால்பதிக்க உள்ளதால் மோடி உற்சாகமாகி இருக்கிறார். முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் அருள் அண்ணாச்சியே நடிக்கத் தொடங்கி விட்டார். அருளுக்கு ஜோடியாக ஹன்சிகா, தமன்னா காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து விட்டனர். இதனால், அண்ணாச்சிக்கு ஆதரவாக சினேகா, காஜல், ஹன்சிகா, தமன்னா, ஜோதிகா என ஒன்றரை டஜன் நடிகைகள் அண்ணாச்சிக்காக பிரச்சாரம் செய்வார்கள் என்கிற நம்பிக்கை மோடிக்கு வலுவான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

 Arul

ஆரம்பத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழகத்தில் பாஜகவுக்கு இப்போது எதிர்ப்பு இருந்தாலும் அடுத்து தாமரை இங்கு மலரும் என்கிற பாஜகவினரின் நம்பிக்கைக்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் இந்த போகப்போக பிடிக்கும் ஃபார்முலா தான் ரோல் மாடலாம். இந்த விஷயத்தில் அருள் அண்ணாச்சியை மோடி மாய்ந்து மாய்ந்து புகழ்ந்து வருகிறாராம்.

இந்நிலையில் தற்போது அருள் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டார். தமிழில் உள்ள நடிகைகளை ஜோடியாக நடிக்க கூப்பிட்டும் ஒரு நடிகையும் சீண்டவில்லை. ஆனாலும் அசராத அண்ணாச்சி ஹிந்தி நடிகைகளுக்கு வலைவிரித்து வருகிறார். இந்தித் திணிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், நடிகைகளை நடிக்க அழைத்து வந்து தமிழகத்தில் வேறு வகையில் இந்தித் திணிப்பை உருவாக்க முயலும் அண்ணாச்சியின் தில்லைப் பார்த்து புல்லரித்துப் போய் கிடக்கிறதாம் பாஜக வட்டாரம்.  

இதனால், படத்துக்கு படம் இதோ வருகிறேன்… அதோ வருகிறேன் என பம்மாத்து காட்டி வரும்  ரஜினியை நம்பிப் பயனில்லை. எனவே இளம்பிள்ளை லெஜண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை அரசியல்வாதி ஆக்கி விட்டால் தமிழகத்தில் தாமரை உறுதியாக மலரும் என பாஜக தலைமை அதிரடி திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறதாம்.

 Arul

ஒருவேளை ரஜினியும் அரசியலுக்கு வந்தால் அண்ணாச்சிக்கு முதல்வர் பதவி, ரஜினி துணை முதல்வர் ஆக்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறதாம் பாஜக. இது குறித்து அருள் அண்ணாச்சியிடமும் பாஜக வட்டாரம் பேசியுள்ளது. தன்னுடன் நடிக்க மறுக்கும் நயன்தாராவை போல பாஜகவின் திட்டத்திற்கு மறுத்து வருவதாக தகவல்.

சீரியஸா இருந்ததா..? இது காமெடியும் இல்லை…. கற்பனை..! ஆனாலும் அடுத்து இப்படி நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.