ரஜினிக்குக் கோரிக்கை வைத்த விஜய் பட நாயகி! 

 

ரஜினிக்குக் கோரிக்கை வைத்த விஜய் பட நாயகி! 

நடிகை விஜயலக்ஷ்மி, ரஜினிகாந்த்தைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ரஜினிக்குக் கோரிக்கை வைத்த விஜய் பட நாயகி! 

சென்னை: நடிகை விஜயலக்ஷ்மி, ரஜினிகாந்த்தைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். அது போகக் கன்னட படங்கள் மற்றும் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் உடல் நலக் குறைவு காரணமாகப் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தோடு தோழியின் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். அந்த சம்பவம் தமிழ்த் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் ரஜினிகாந்த்தைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நானே என் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டேன், பிறர் நலனுக்காகப் பார்த்தேன் ஆனால் அவர்களே என்னைக் கைவிட்டு விட்டார்கள். நான், எனது அம்மா, அக்கா மூவரும் வாழ்க்கையை வாழ்கிறோம் என்று சொல்வதைவிட நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம். 

அதனால் தயவு செய்து ரஜினியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள். அவரை பார்த்துப் பேசினால் என் கவலை தீரும். எனது கடைசி நம்பிக்கையாக இருப்பதே அவர் தான். இருளில் இருக்கும் எனது வாழ்க்கையை வெளிச்சம் தருவார் என எதிர்பார்க்கிறேன். இதை ரஜினியிடம் எடுத்துச்சொல்லுங்கள்’ என கண்ணீருடன் பேசியுள்ளார்.