ரஜினிகாந்த் மே அல்லது ஜூன் மாதம் புது கட்சி தொடங்கலாம் : கராத்தே தியாகராஜன் பேட்டி!

 

ரஜினிகாந்த் மே அல்லது ஜூன் மாதம் புது கட்சி தொடங்கலாம் :  கராத்தே தியாகராஜன் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவாரா மாட்டாரா என்பது குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகப்  பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவாரா மாட்டாரா என்பது குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகப்  பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, உரிய நேரத்தில் கட்சி தொடங்குவதா.. இல்லையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். இதனிடையே கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து அரசியலில் ஈடுபடப் போகின்றனர் என்றும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் வரும் ஏப்ரல் மாதம் புது கட்சி தொடங்கி, ஜூன் மாதம் மாநாடு நடத்துவார் என்றும் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைவார் என்றும் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ttn

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் அவரது புதிய கட்சியை வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்குவார். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் திமுகவுக்கும் ரஜினிக்கும் தான் போட்டி ஏற்படும். அதாவது ஸ்டாலினுக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று தெரிவித்துள்ளார். இதில், ரஜினி ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடுவார் என்று கூறியுள்ளதால்  ரஜினி அதிமுக-பா.ஜ.க கூட்டணியில் தான் இணைவார் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.