ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும்…அப்போ அன்புமணியின் முதல்வர் கனவுக்கு ஆப்பா?!

 

ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும்…அப்போ அன்புமணியின் முதல்வர் கனவுக்கு  ஆப்பா?!

 எப்போது கட்சி துவங்குவார் என்ற கேள்வியே அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. 

ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் காலூன்றி வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத துடிப்பு, ஸ்டைல் என மக்கள் மனதில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறி பரபரப்பை கிளப்புவதோடு ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையிலும்  சிக்கி கொள்கிறார். ரஜினிகாந்த்  எப்போது கட்சி துவங்குவார் என்ற கேள்வியே அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. 

 


 

இந்நிலையில் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தினகரன் தலைமையிலான கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் வாக்குகளை பாதிக்கும் என ரஜினி அச்சம் . எனவே டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைக்க ரஜினி விரும்பவில்லை. பாஜகவுடன் கூட்டு சேர்வதா இல்லையா என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுப்பார்’ என்றார். தமிழருவி மணியனின் இந்த பேட்டிக்கு  பாமக மற்றும்  அமமுக தலைமையின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.