ரஜினிகாந்தை அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்த இஸ்லாமிய அமைப்பினர்கள்

 

ரஜினிகாந்தை அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்த இஸ்லாமிய அமைப்பினர்கள்

குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே நாடு தோறும் பல்வேறு போராட்டங்களும் கண்டனங்களும் வெடித்து வருகின்றன. அரசியல் தலைவைர் அனைவரும் இதில் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டனர். சிஏஏ பற்றி ரஜினி தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே நாடு தோறும் பல்வேறு போராட்டங்களும் கண்டனங்களும் வெடித்து வருகின்றன. அரசியல் தலைவைர் அனைவரும் இதில் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டனர். சிஏஏ பற்றி ரஜினி தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதில் “குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன்.  என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்தவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளனர், அது குறித்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது” என்று கூறியிருந்தார்.

rajinikanth-meets-muslim-leaders

இதனையடுத்து, மார்ச் 1-ம்தேதி இஸ்லாமிய தலைவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். குடியுரிமை சட்டத்தில் உள்ள விஷயங்களை ரஜினியிடம்  எடுத்துரைத்துக்கவே இந்த சந்திப்பு என்று அவர்கள் கூறியிருந்தனர். 

நாங்கள் ரஜினிகாந்தை சந்தித்து தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிதுள்ளோம். NPR காரணமாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் அவரிடம் விளக்கினோம். அவர் எங்கள் கருத்தை புரிந்து கொண்டார், மேலும் முஸ்லிம்களிடையே அச்சத்தை அகற்ற தேவையான அனைத்தையும் செய்வார் என்று உறுதியளித்தார்” என்று  தமிழ்நாடு ஜமதுல் உலமா சபாயின் தலைவர், எம் பகாவி தெரிவித்தார்.

kamla-meeting

இந்நிலையில், ரஜினியை சந்தித்து பேசிய  நிலையில், இன்று இஸ்லாமிய குழு தலைவர்கள் மக்கள் நீதிமய்யத் தலைவர் கமலஹாசனைச் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து அவரது முடிவு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.