ரஜினிகாந்தின் கருத்தை ஆதரித்தேனா? போலீஸ் நிலையம் சென்ற மு.க.அழகிரி!

 

ரஜினிகாந்தின் கருத்தை ஆதரித்தேனா? போலீஸ் நிலையம் சென்ற மு.க.அழகிரி!

கடந்த சில தினங்களாக மு.க.அழகிரி பெயரில் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு தொடர்பாக சர்ச்சை பூதாகரமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகள் தொடர்பாக ரஜினி வெளியிட்ட ட்வீட்டுக்கு ஆதரவு தெரிவித்து மு.க.அழகிரி ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட ட்வீட் மற்றும் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக வெளியிட்ட ட்வீட்களை உண்மை என நினைத்துப் பலரும் செய்தியாக வெளியிட்டனர். ஆனால் அது போலிக் கணக்கு என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

அழகிரி ட்வீட்

இதுகுறித்து விளக்கமளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ரஜினிகாந்தின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை எனவும் அவரின் கருத்ஹ்டை நான் வரவேற்பது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இது முற்றிலும் தவறு என்றும் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை தான் ஆதரிப்பது போன்று சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்துடன் செய்தி உலா வருவது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் தனக்கு சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தனது பெயரை பயன்படுத்தி தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. அழகிரி, அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறினார். அதே நேரத்தில், ரஜினி கட்சி ஆரம்பித்தால் நீங்க சேருவீர்களான்னு கேள்வி கேட்டதுக்கு  அழகிரி எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.