ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை அவருடைய தனிப்பட்ட கருத்து : டிடிவி தினகரன்

 

ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை அவருடைய தனிப்பட்ட கருத்து : டிடிவி தினகரன்

அமமுக கட்சியின் புதிய தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் இன்று திறக்கப்பட்டது.

அமமுக கட்சியின் புதிய தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் இன்று திறக்கப்பட்டது. அதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார். அந்த திறப்பு விழாவில் கழக முக்கிய நிர்வாகிகள் வெற்றிவேல்,சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். அந்த கூட்டணி மிகவும் வலுவாக அமைந்து தேர்தலில் மாபெரும் வெற்றி அடையும். அமமுகவுக்கு விரைவில் தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கும். என்று கூறினார். 

ttn

தொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலாவைப் பற்றிப் பேசிய அவர், சசிகலாவை வெளியே எடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவர் வெளியே வந்ததும், அமமுகவில் இணைவார் என்று கூறினார். அதனையடுத்து, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட கருத்து அதில் நாம் தலையிட முடியாது என்று நடிகர் வடிவேலு படங்களில் நடிக்காமல் விலகி இருப்பதைச் சுட்டிக் காட்டி பேசினார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமமுக போட்டியிடும் இடங்களுள் ஒன்று ஆர்.கே நகர் என்றும் மற்றொரு இடம் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.