ரசிகையாக தர்பாரை ரசிக்கிறோம் – மீனாவுடன் குஷ்பு! 

 

ரசிகையாக தர்பாரை ரசிக்கிறோம் – மீனாவுடன் குஷ்பு! 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினி போலீஸாக  நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்பதால் பிரபலங்கள் பலர் அதிகாலை சிறப்பு காட்சிக்கு  தியேட்டருக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கௌதம் மேனன்,  லிங்குசாமி உள்ளிட்ட பலர் படத்தை பார்த்து ரசித்தனர்.

 

 

இந்நிலையில் நடிகை மீனாவும் அவரது மகள் மற்றும் குஷ்புவுடன் தர்பார் படம் பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.