ரசிகர்களை சந்திக்க நேரில் செல்லும் சிம்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

ரசிகர்களை சந்திக்க நேரில் செல்லும் சிம்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சிம்பு தனது ரசிகர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சிம்பு தனது ரசிகர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளிவர உள்ளது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

str

இந்நிலையில்,ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைக் காண நடிகர் சிம்பு சென்னையில் உள்ள பிரபல திரையரங்குளான ரோகிணி, வெற்றி, ஜி.கே.சினிமாஸ் மற்றும் காசி திரையரங்குகளுக்குச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவின் வருகைக்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.