ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா: வைரலாகும் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!

 

ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா: வைரலாகும் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!

நடிகை சமந்தா பகிர்ந்த கவர்ச்சியான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை சமந்தா பகிர்ந்த கவர்ச்சியான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த ஆண்டு அக்.6ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, வரிசையாக வெற்றிப் படங்களை குவித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’, ‘இரும்புத்திரை’, ‘யூ-டர்ன்’, ’மகாநடி’, ‘சீமராஜா’ போன்ற திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் சமந்தா எடுத்துக் கொண்ட ஹாட் ஃபோட்டோ ஷூட்டின் புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளார்.

சமந்தாவின் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மிஸ் கிராணி’, ‘மஜிலி’ உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.