ரசிகர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் நடிகர் விஜய்

 

ரசிகர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் நடிகர் விஜய்

இதே போல பெப்சி அமைப்பிற்கு விஜய் 25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஊரடங்கு நீடிக்கும் காலம் வரை  இது போன்று உதவி செய்யப்படும் என்றும் விஜய் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளதாம். 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தளபதியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருபடம் கொடுத்தாலும் அவரின் கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெற்றி, தோல்வி என வாழ்க்கையில்  படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது ரசிகர்கள். 

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக திரைக்கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இதன் காரணமாக கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நடிகர் விஜய் 1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.  தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் , பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும் விஜய் நிதி உதவி செய்துள்ளார். கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,  புதுச்சேரி மாநிலங்களுக்கு  தலா 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். அதேபோல்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கும்  நிதி உதவி அளித்து உள்ளார் விஜய். இதே போல பெப்சி அமைப்பிற்கு விஜய் 25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

tt

இந்நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் கொண்டுள்ள அனைத்து மாநில மன்ற தலைவர்களையும்  தொடர்பு கொண்டு , ஊராடங்கால் கஷ்டபடும் தனது ரசிகர்கள் குறித்த விவரத்தை பட்டியலிட சொல்லியுள்ளார்.  பின்னர் தனது வந்த விவரத்தை வைத்து பாதிக்கப்பட்டுள்ள ரசிகர்களின்  வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை வைத்து அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.  மேலும்  ஊரடங்கு நீடிக்கும் காலம் வரை  இது போன்று உதவி செய்யப்படும் என்றும் விஜய் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளதாம். 

tt

விஜய்யின்  ரசிகர் மன்றத்தை  பொறுத்தவரையில் தமிழகம் முழுவதும்  கட்சியின் கட்டமைப்பை போன்று முழு டேட்டா பேஸ் கொண்ட விவரங்கள் வைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ரசிகர்களுக்கு உதவுவது எளிமையானதாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது என்பது பல முறைக்கேடுகளை தவிர்க்கும். 

tt

இக்கட்டான சூழலில் தனது ரசிகர்களுக்கு உதவும் நடிகர் விஜய்க்கு பல தரப்பு மக்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.