ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த தனுஷ்! 

 

ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த தனுஷ்! 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 39வது படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 39வது படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். 

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷ், சினேகா இணைந்து நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் படக்குழு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. 

அதன்படி பட்டாஸ் என்று பெயரிட்டுள்ள அந்த போஸ்டரில் தனுஷ் மிகவும் ஸ்டைலாக காட்டப்பட்டுள்ளார். மேலும் வரும் தீபாவளி அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.