ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த விஜய் தேவரகொண்டா!

 

ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் விஜய் தேவரைகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள் அப்படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  

விஜய் தேவரக்கொண்டா - ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை 
பரத் கம்மா இயக்கியுள்ளர். 

விஜய் தேவரக்கொண்டா - ராஷ்மிகா

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை வரும் ஜுன் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் அன்று வெளியான இந்த அறிவிப்பு அவர் ரசிகர்கள் மத்தியில் ட்ரீட்டாக கருதப்படுகிறது.