ரசிகர்களுக்குப் பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த ரன்வீர் சிங்!

 

ரசிகர்களுக்குப் பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த ரன்வீர் சிங்!

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு  அளித்துள்ளார்.

சென்னை: பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு  அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றியதை மையமாக வைத்து ’83’ என்ற பாலிவுட் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கி வரும் இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில் தேவ் வேடத்தில் நடித்து வருகிறார். அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன், தாஹிர் ராஜ், ஜத்தின் சர்னா, கோலிவுட் நாயகன் ஜீவா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில்  நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்  திரைக்கு வரவுள்ளது. 

இந்நிலையில்,ரன்வீர் சிங் இன்று தனது 34ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதையொட்டி அவர்களின் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ரன்வீர் சிங், ’83’ படத்தில் இடம்பெற்றுள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அந்த படத்தில் வெள்ளை நிற உடையில் கையில் பந்துடனும், பார்ப்பதற்கு கபில் தேவ்வை போன்றே அவர் காட்சியளிக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.