ரசாயன கிடங்கில் தீவிபத்து! கொளுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை!!

 

ரசாயன கிடங்கில் தீவிபத்து! கொளுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை!!

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.  முதலில் தகவலறிந்து சென்ற 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தீ விபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

fire

அதன்பின்  15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ வாட்டர் லாரிகள் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டுவருகிறது. மேலும் சி.பி.சி.எல் இடமிருந்து  நுரைகளை பீய்ச்சி அடிக்கும் Foam tanker வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டுவருகிறது. தீவிபத்தில் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட லாரிகள், 8 கார்கள், 1 இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலையில் யாரும் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.