ரசாயன ஆலையில் வாயுக்கசிவு.. நடந்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த மக்கள்: பதைபதைக்கும் வீடியோ!

 

ரசாயன ஆலையில் வாயுக்கசிவு.. நடந்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த மக்கள்: பதைபதைக்கும் வீடியோ!

ஆலையை சுற்றி இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் இண்டஸ்ட்ரி என்னும் ரசாயன ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் இன்று காலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த வாயுவால் அங்கிருந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆலையை சுற்றி இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆலையை சுற்றி 3 கி.மீ தூரத்துக்கு வாயு பரவியுள்ளதால் மக்களை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆட்சியர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த நிலைமை சரி செய்யப்படும் என்றும் கூறினார். 

ttn

விபத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர், எங்களுக்கு எங்கே ஓடுவது என்றே தெரியவில்லை என்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் எல்லாரும் அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் கூறினார்.

இதனிடையே வாயுக்கசிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகாமையில் பைக்கில் மற்றும் நடந்து சென்றவர்கள் என அனைத்து மக்களும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த வீடியோ மனதை பதைபதைக்க வைக்கிறது.