ரசாயனப் பொருட்களை வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல் !

 

ரசாயனப் பொருட்களை வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல் !

பழங்கள் மட்டுமல்லாது காய்கறிகளில் கூட ரசாயனம் கலக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் பழங்கள் மொத்த விலைக்குக் கிடைக்கும் என்பதால் சிறுவியாபாரிகள் உட்பட பல பேர் அங்குச் சென்று பழங்களை வாங்குவர். கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை உரம் போட்டு பழங்களின் விளைச்சலை அதிகரிப்பதும், ரசாயன பொருட்களை வைத்து பழங்களைப் பழுக்க வைப்பதும் அதிகரித்து வருகின்றன. அந்த ரசாயன உரங்களால், அதனை உண்ணும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. பழங்கள் மட்டுமல்லாது காய்கறிகளில் கூட ரசாயனம் கலக்கப்படுகிறது.

 

Fruit

கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் வாழைப்பழங்கள் செயற்கை முறையில் ரசாயன பொருட்களைப் பயன்படுத்திப் பழுக்க வைக்கப் படுகின்றன என்று உணவுப் பாதுகாப்பு துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, 30 பேர் கொண்ட குழு கோயம்பேடு பழக்கடைகளில் அதிரடியாக இன்று  சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், 10 கடைகளில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திப் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மூட்டை மூட்டைகளாக ரசாயன பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டன. 

Banana

இது குறித்து பேசிய அதிகாரிகள், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக ரசாயன பொருட்களை பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பழக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.