ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா நடிகை ரெஜினா? 

 

ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா நடிகை ரெஜினா? 

நடிகை ரெஜினா ரகசிய நிச்சியதார்தம் செய்து கொண்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. 

சென்னை: நடிகை ரெஜினா ரகசிய நிச்சியதார்தம் செய்து கொண்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. 

தமிழில் கண்ட நாள் முதல் படம் மூலமாக அறிமுகமாகி பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரெஜினா. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகயுள்ளன. 

ReginaCassandra

இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகத் தெலுங்கு பட திரையுலகில் தகவல் பரவி வருகிறது.  

ReginaCassandra

அந்த ரகசிய நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு திருமண வாழ்வை ரெஜினா துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதுபோன்ற செய்தி பரவியதற்கு ரெஜினா தரப்பிலிருந்து இது வரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.