‘ரகசிய அறை பயன்படுத்தனும்’னு விரும்புகிறீர்களா? உங்களைத் திருத்தவே முடியாது…!’: பிக் பாஸ் புரோமோ இதோ!  

 

‘ரகசிய அறை பயன்படுத்தனும்’னு விரும்புகிறீர்களா? உங்களைத் திருத்தவே முடியாது…!’: பிக் பாஸ் புரோமோ இதோ!  

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பல சீரியசான பிரச்சனைகள் நடந்தது. அதை ஆராய்வதற்கு முன்பாக நேற்று கமல்ஹாசன் ரகசிய அறையை அறிமுகம் செய்தார். 

அனேகமாக அந்த ரகசிய அறை இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் செல்வர் என்று பேசப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் மீரா தான் மக்கள் மத்தியில் அதிக வெறுப்பைச் சம்பாதித்திருந்தார். அதனால் அவர் தான் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த ரகசிய அறையில் மீரா அனுப்பப்படலாம் என்று பேசப்படுகிறது. 

தற்போது அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல், ‘கண்ணால் காண்பதும் பொய். காதல் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். படம் போட்டு காண்பித்து, நியூஸ்’ல போட்டு காண்பித்தாலும் கற்பனை கதை சொல்லுவாங்க. இந்த ரகசியாக அறை பயன்படுத்துவாங்க தோணுதா? பயன்படுத்தணும்னு  விரும்புகிறீர்களா? உங்கள திருத்தவே முடியாது’ என்று பேசியுள்ளார். 

கமலின் இந்த பேச்சிலிருந்து தற்போது மீரா தான் ரகசியாக அறைக்கு செல்லவுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாக வெளிவந்துள்ளது.