ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல்?

 

ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல்?

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

புதுதில்லி: ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை கூறி வருகிறார். விமானம் வாங்குவதற்கு இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம், டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என ராகுல் கூறி வருகிறார்.

இதனிடையே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ரஃபேல் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசின் கடைசிக் கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.