யோவ் பெருமாளு என்னய்யா தலையெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு??

 

யோவ் பெருமாளு என்னய்யா தலையெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு??

பிரதமர் மோடி நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்றதும், தமிழக மக்கள் எல்லாம் பதறிப்போய் டிவி முன் அமர்ந்திருந்தனர். எங்க 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிடுவாரோ என்ற அச்சம்.

பிரதமர் மோடி நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்றதும், தமிழக மக்கள் எல்லாம் பதறிப்போய் டிவி முன் அமர்ந்திருந்தனர். எங்க 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிடுவாரோ என்ற அச்சம். ஆனால் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் பற்றிய ஒரு அரிய செய்தியை வெளியிட்டார். விண்ணில் ஹே, சாட்டிலைட் ஹே, சக்ஸஸ் ஹே என்றார். இங்க மக்கள் சோத்துக்கு கஷ்டப்படும்போது உங்களுக்கு சேட்டிலைட் சோக்கு கேட்குதோ என நெட்டிசன்கள் வெகுண்டெழுந்துவிட்டனர்.

நெட்டிசன் ஒருவர் எழுதிய குட்டி கதையோடு, அவர்களின் அட்டூழியங்களை காண்போம்

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மோடிஜி அஸ்ட்ரோ பிசிக்சில் டபுள் பி.ஹெச்.டி முடித்தவர், ஆனால் யாருக்கும் தெரியாமல் டீ விற்பது போல நடித்துக்கொண்டு தனது தனிப்பட்ட ஆய்வகத்தில் ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு பிரதமரான பின்பும் தனது கல்வித்தகுதி குறித்தும் ஆராய்ச்சி குறித்தும் எதிரி நாடுகளுக்கு தெரிந்து விடாமல் பார்த்துக்கொண்டார்.

தனது கல்வித்தகுதி எதிரி நாடுகளுக்கு தெரிந்துவிட்டால் விண்வெளி திட்டங்களை உளவு பார்த்துவிடுவார்கள் என்று அஞ்சி கல்வித்தகுதி குறித்த எதிர்கட்சியினரின் அனைத்து ஏளன பேச்சுக்களையும் நாட்டின் பாதுகாப்பிற்காக சகித்துக்கொண்டார்.

பிரதமராக பதவியேற்ற முதல் நாளே அனைத்து விண்வெளி விஞ்ஞானிகளையும் அழைத்து தனது கனவு விண்வெளி திட்டத்தை அறிவித்தார். அங்கிருந்த அனைவருமே இது சாத்தியமே இல்லை என்று மறுத்தனர். ஆனால், மோடிஜி தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்த திட்டத்தின் புளூ பிரிண்ட்டை விஞ்ஞானிகளின் முன் சமர்ப்பிக்க, இது ஒரு ‘பிஸிக்கல் மிராக்கிள்’ என்று அதிர்ச்சி அடைந்தனர்.

‘அது தான் 99 சதவிகிதம் முடித்துவிட்டீர்களே, இன்னமும் ஏன் முடிக்காமல் இருக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு அந்த ஒரு சதவீதத்தை முடிப்பதற்கான பிரத்யேக கனிமம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

அந்த கனிமத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டபோது இந்தியாவில் எங்குமே இல்லை என்றும் எங்கு கிடைக்கிறது என்பதும் மர்மமாக இருக்கிறது என்றும் அறிவித்தார். பிறகு எப்படி அதை கண்டுபிடிப்பது என்று கேட்டபோது மோடிஜி சொன்ன பதிலை கேட்டவுடன் மெய்சிலிர்த்து விட்டனர் நமது விஞ்ஞானிகள். ஆம், நமது மோடிஜி ஒரு நாட்டில் காலடி எடுத்து வைக்கும் போதே அந்த நாட்டில் அந்த கனிமம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து விடும் அபூர்வ சக்தி அவருக்கு உண்டு. ஆனால், நம் துரதிருஷ்டம் பல்வேறு நாடுகளுக்கு சென்ற போதும் கிடைக்கவில்லை.

நமது அதிர்ஷ்டம் கடைசியாக சென்ற நாட்டில் அந்த கனிமம் கிடைப்பதை அறிந்து உடனடியாக அந்த நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்திட்டுதிட்டத்தை பூர்த்தி செய்து அறிவித்து விட்டார்.

இந்த திட்டம் முடியும் வரை தூங்கவே இல்லை என்றும் என் கனவு திட்டத்தை பாரத நாட்டிற்காக நிறைவேற்றிவிட்டேன் என்றும் இனிமேல் திரும்பவும் பிரதமராவது குறித்து தனக்கு கவலையில்லை என்று சொல்லும் போது விஞ்ஞானிகள் கண்கலங்கி விட்டனராம். இப்போது சொல்லுங்கள், விண்வெளி சாதனைக்கும் பிரதமருக்கும் என்ன சம்பந்தம் என்று எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு அருகதை இருக்கிறதா? சங்கி என்றால் ஷார் செய்யவும் – ராஜகோபால் சுப்பிரமணியம்