யோகி பாபுவுடன் டுயட் பாடும் ‘பிக் பாஸ்’ யாஷிகா?

 

யோகி பாபுவுடன் டுயட் பாடும் ‘பிக் பாஸ்’ யாஷிகா?

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’மோ’ என்ற திகில் படத்தை இயக்கிய புவன்.ஆர்.நுல்லன் இயக்கும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸாம்பி-காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘ஸோம்பி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

yogibabu

‘ஸோம்பி’ படத்தின் ஹீரோவாக யோகிபாபு நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யாஷிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்3 பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நாளை  டிச.13ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaashika

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வலுவான போட்டியாளராக மக்கள் மனதை வென்ற யாஷிகா, ஏற்கனவே மகத்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.