யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு எப்படி டைட்டில் வச்சுருக்காங்க பாருங்க !?

 

யோகிபாபு  ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு எப்படி டைட்டில் வச்சுருக்காங்க பாருங்க !?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானது.

சென்னை: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானது.

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபு. காமெடி வேடங்களில் நடிப்பதை தொடர்ந்து கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

panni kutty

இந்நிலையில், ‘பன்னிக்குட்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அனுசரண் முருகையா இயக்குள்ளார். இதில் யோகி பாபுடன் இணைந்து கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி இன்னும் ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே என்கிற கிருஷ்ணகுமார் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பக்கப்படுகிறது.