யெஸ் வங்கியிலிருந்த ரூ. 1300 கோடியை உஷார் செய்த திருப்பதி தேவஸ்தானம்!

 

யெஸ் வங்கியிலிருந்த ரூ. 1300 கோடியை உஷார் செய்த திருப்பதி தேவஸ்தானம்!

சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது

சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலமாக இனி யெஸ் வங்கி எந்த முதலீடு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. ஆனால் இதனால் முதலீட்டாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

yes bank

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதி நான்கு தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. அதில் ஒன்று யெஸ் வங்கி. யெஸ் வங்கியில் பிரச்னை இருப்பதை முன்பே அறிந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம், கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில் நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 1300 கோடியை எடுத்துள்ளது.